Friday, December 05, 2008

வார்த்தையால கொன்னுபுட்ட...

வார்த்தையில
விரசம் வச்சு
பார்க்கச்சொல்லி
நான் கொடுத்தேன்...
பாத்துபுட்டு
ரெண்டுநாளா
பரிதவிக்க வச்சீயே...
வார்த்தையொன்றும்
பேசவில்லை
மௌனத்தால
கொன்னுபுட்டே...

அப்புறமா கதைக்கயில
"வார்த்தையால வர்ணிச்சு
கன்னி களிச்சுபுட்ட..."
என்று நீ சொல்லியத
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்...
எக்குதப்பா எழுதிபுட்ட
வருத்தத்தில நானிருக்க
வார்த்தையொண்டு
சொன்னாயே
வயசுபுள்ள நீயெனக்கு...
வாக்கபட்ட சந்தோஷத்த
தந்தவார்த்த இதுதானோ
என் செல்லத்தங்கமே...
"கவிதையால கற்பழிக்க
எனக்குத் தெரியாது...
தெரிஞ்சிருந்தா
புள்ள இருக்கும்
இன்னேரம்
உன் வயித்தில..."

என் பிடிப்பு...

உன்னை ஏன் பிடிக்குமென
என்னை நீ குடைந்தெடுப்பாய்...
காரணம் என்னவென
எண்ணங்களின் எல்லைவரை
உரைசிப் பார்ப்பேன்...
சொல்லப் பதில் கிடைப்பதில்லை
கல்லாகி நின்றிடுவேன்...

கேட்பது எளிதென நீயறிவாய்
முட்களில் மோதுவது நானல்லவோ...
பாற்கடல் கிடைப்பினும்
பருகிடத்தான் மனமிருக்காது
என்னருகில் நீயிருந்தால்...
உவமைகள் உவர்ப்பாகலாம்
உண்மைகள் ஊமையாவதில்லை...

என் கிறுக்கல்களில் ஏதோ இருக்கென
இறுக்கமாய் படித்திடுவாய்...
நாடி பிடித்து என்னை
தாடியில்லா கவிஞனாக்கினாய்...
வெறும் கோடுகளான கீறல்களில்
கவிதையென தேன் வடித்தாய்...

உன்னுடனே வாழ்வதனால்
ஏனுனைப் பிடிக்குமென
சிந்தை கலங்குவதில்லை...
எந்தனுயிர் போகும்வரை
உன்னுடனே வாழவேண்டும்
அதனால்தான் பிடிக்கிறது
இந்த வாழ்க்கைதனை...

இத்தனையும் செய்து என்னை
உன்னில் பித்தனாக்கினாய்
ஈற்றில் புத்தனாக்கினாய்...
இப்போதே செத்துவிடலாம்
உந்தன் நினைவுகளோடே...

Thursday, December 04, 2008

செல்லத்தங்கமே...!

தலைவிதி...


மனுஷன் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கிற விஷயம் என்னான்னு கேட்டிங்கனா, தலைமுடின்னு பதில் சொல்லலாம்... (சிலர் அடிக்கடி மனசையும் மாத்திக்குவாங்க...). இதுதான் தலைவிதியான்னு யோசிக்கிற மாதிரியும் தலைமுடி அலங்காரங்கள் (அலங்கோலங்கள்) இருக்கும். அப்படி அலங்கோலமான (அவங்களுக்கு அலங்காரமான...) சிகை அலங்காரங்களையே இங்கு தந்திருக்கேன்.

இது எப்பிடி இருக்கு...?


நாம கழிவின்னு நினைக்கிற எத்தனையோ சமாசாரங்க பிரயோசனமா இருக்கிறத உணர்ந்திருப்பிங்க. அப்பிடி ஒரு விஷயம்தான் இது... விதவிதமான போத்தல்களில் குடிபானங்கள் வருவதை நீங்கள் கண்டிருப்பிங்க. அதை குடிச்சு முடிஞ்சதும் யாருக்கும் தெரியாம வீசிடுவிங்க. ஆனா, இந்தப் படங்களைப் பாத்திங்கனா இனிமே அந்த போத்தல்களை வீசமாட்டிங்க. எப்படி அழகா மாத்தியிருக்காங்க பாத்திங்களா...?

Wednesday, December 03, 2008

காத்திருப்பேன் உனக்காக...

எண்ணற்ற ஆசைகளை
மண்ணுக்குள் புதைத்துவைக்க
மார்புதட்டி முன்சென்றேன்...
கண்ணுக்குள் இருந்த கனவு
கானல்நீர் ஆகிடாமல்
வாய்விட்டு அழுதுவிட்டேன்...

பார்போற்ற வாழ்ந்திடவே
ஊர்தெரிந்து பழகிட்டோம்...
யார்கண் பட்டதுவோ
கண்ணீரில் மிதக்கின்றோம்...
பிரிவொன்று வந்திடுமோ
ஏக்கத்தில் தவிக்கிறேன்...
மாற்றங்கள் வேண்டுமென
வரமொன்று கேட்கிறேன்...

நெஞ்சத்தின் சுமைகளை
ஆமையாய் நகர்த்திறேன்...
சேதாரம் அதிகமாகி
மனதார தவிக்கிறேன்...
ஆதாரம் இல்லாமல்
பிரிவெண்ணி வெம்புகிறேன்...

என் அன்பு நிலைத்திடவே
துன்பத்தை எனதாக்கினேன்...
உன் அன்பு வேண்டுமென
மனதார காத்திருந்தேன்...
வெகுநாளாய் காத்திருந்த
காதலின்று வேதனையில்
சோதனை காண்கிறதே...!
நினைவிழந்த அன்புலகில்
கால்பதித்து நீ வரவே
காத்திருப்பேன் உனக்காக...

Tuesday, December 02, 2008

பிடித்ததை செய்திடு...

உண்மையை உணரும்
காலம்மட்டும் உறவுகள்
எம்மை தொடர்வதில்லை...
விக்கும் வேளையில் தண்ணீராய்
சிக்கும் வாழ்வில் விடியலாய்
பாசத்தின் பிணைப்பிருக்கும்...

இருக்கின்ற பொழுதில்
வாழ்வில் பிடிப்பிருக்காது...
பிரிகின்றபொழுதில்
நெஞ்சில்துடிப்பிருக்காது...
யதார்த்தத்தின் வாழ்வை
யார்தான் புரிந்திடுவர்...?
உண்மைகள் கசக்கும்
வாய்மைகள் பொய்க்கும்
இதுதான் யதார்த்தமென்பர்...
நினைவுகள் நம்மை
சீண்டும்பொழுதில்
நிம்மதி கிடைக்காது...
நிஜத்தினில் வாழ்கையில்
நினைவுகள் இனித்திட்டால்
நிம்மதி உனக்கேது...?

உறவுகள் பிரிந்து
ஊமைகளாகிட்ட
வாழ்வினில் இனிப்பேது...?
சொந்தத்தின் அந்தம்வரை
பாசத்தின் பிணைப்பிருக்கும்...
சோகத்தில் துவண்டாலும்
வேஷமில்லா அன்பிருக்கும்...
இதுதான் வாழ்வென
எப்படிச் சொன்னாலும்
உருப்படி கிடையாது...
பிடித்ததை செய்திடு
தடைகளை உடைத்திடு
வாழ்வினில் வசந்தம்வரும்...

சொர்க்கம்...


கண்கள் சொல்லும் கதை...

எங்கள் மனதினுடைய வெளிப்பாடு எதுவெனக் கேட்டால் சட்டென எல்லோரும் முகம் என்று சொல்வீர்கள். அந்த முகத்திலே முக்கிய பகுதி கண் என்றால் அது சாலப்பொருந்தும். இன்பம், துன்பம், வெறுப்பு, விருப்பு, ஏக்கம் என எதை எடுத்துக்கொண்டாலும் அது கண்களில் பிரதிபலிக்கும். கண்கள்தான் எமது உள்ளத்தின் விம்பம் எனலாம்.
ஒருவர் நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசுகின்றார் எனில் அவரது மனதில் குழப்பம் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அப்படி கண்களைப் பார்த்து பேசமுடியவில்லை எனில் அவரிடம் ஏதோ ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்... (இந்த விடயத்தில் காதலர்கள் விதிவிலக்கு...). குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின்போது கண்களையே கூர்ந்து கவனிப்பர்... (அனுபவப் பட்டவர்களைக் கேட்டுப்பாருங்கள். எனக்கும் அனுபவம் இருக்கு...). எதையாவது நாங்கள் மறைக்கின்றோம் என்றால் எமது கண்களில் ஒரு தயக்கம் இழையோடும். அதைவைத்தே மிகுதி விடயங்களை அறிந்துவிடுவார்கள். அதேபோல் இப்பொழுது கைவிரல் அடையாளங்களுக்குப் பதிலாக கண்களையே பாதுகாப்பு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கைவிரல் அடையாளங்களைக்கூட ஏமாற்றிவிடலாமாம். ஆனால் கண்களை ஏமாற்றுவது கடினம் என்பது நிபுணர்களின் கருத்து.
சரி... இப்படியெல்லாம் கண்கள் பற்றிக் கூறுகின்றேனே... காதலர்கள் ஏன் கண்களைப் பார்த்து கதைப்பது குறைவு...? இதற்கும் காரணம் இருக்கிறது... (அனுபவமா என கேட்காதீர்கள்...). காதலர்கள் கதைக்கின்றபோது உணர்வுகளின் உச்சத்தில் இருப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் கண்களை நோக்கினால் எந்த உணர்வினையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்... இதனால் ஏதாவது ஏடாகுடமாக நடந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்... (ஏமாற்றுபவர்களாக இருந்தாலும் கண்களை நோக்கமாட்டார்கள்...). இப்படி கண்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையினால் நம் கண்களை பாதுகாப்பது நம் கடமையல்லவா? கண்களைப் பாதுகாப்பது பற்றி நெற்றில் சுட்ட சில தகவல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.
தொடர்ந்து ரிவி பார்ப்பவர்கள், தொடர்ந்து கொம்பியூட்டரில் வேலை செய்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், புத்தகங்கள் வாசிப்பவர்கள் என பலருக்கு கண்களை பாதுகாப்பது அத்தியாவசியமாகிறது. குறைந்தது ஒருநாளைக்கு 15 நிமிடங்களாவது கண்களைப் பராமரிக்க வேண்டும். சாதாரணமாக நீங்கள் அடிக்கடி பாவிக்கின்ற வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு இவை மூன்றையும் வைத்தே உங்கள் கண்களை பராமரிக்க முடியுமாம். வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் நன்றாக பிசைந்து களிபோல் ஆக்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பும் சேர்த்து குளிர் நீர்விட்டு பசையாக்கிக் கொண்டதன் பின்னர், பஞ்சு ஒரு துண்டினை எடுத்து அந்தக் களியில் தோய்த்து கண்களின்மேல் வைத்து 15-20 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். இப்படி ஒவ்வொருநாளும் செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குமாம்.
அதேசமயத்தில் ஒவ்வொருநாளும் குளிர்ந்த நீரில் சிறிதளவு உப்புச் சேர்த்து கண்களை கழுவிவந்தால் ஓய்வின்மையை கண்கள் வெளிப்படுத்தாதாம். கண்கள் சிவந்து காணப்பட்டால் (சிவந்த கண்களை உடையவர்களுக்கு செக்ஸ் பீலிங்ஸ் அதிகம்னு எங்கயோ கேள்விப்பட்டிருக்கன்...) தேக்கரண்டி ஒன்றை எடுத்து ஐஸ் கட்டிக்குள் சிறிதுநேரம் புதைத்து வைத்து, அக்கரண்டியினால் கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் குணமடையுமாம். இப்படி பல வழிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த வழிமுறைகளில் கண்களைப் பராமரிப்பது உங்கள் பொறுப்பல்லவா?

Monday, December 01, 2008

புரிதல்...

முகஸ்துதி பாடி
முதுகினில் குத்தும்
முறையது தெரியாது...
பிடித்ததை பகிர்ந்து
பிடித்தமாய் வாழ்ந்திட
படிப்பினை தேவை
வாழ்வினிலே...

மனதினை வருத்தும்
வார்த்தைகள் கசக்கும்
உண்மைகள்
வெளியானால்...
நிஜத்தினில் வாழ்ந்திட
நிழலது தேவையில்லை
வாழ்வினைப் புரிந்துவிடு...

பாசத்தைப் புதைத்து
வேஷமாய் வாழ்ந்திட
எனக்கது தெரியாது...
நிஜ அன்பைத் தேடும்
மனமதுவை
வேதனை சூழ்வது
சகஜமடி...

புரிதலும் இல்லை
பாசமும் இல்லை
பழிகள் கேட்டேனே...
உரிமைகள் பேசிய
வரிகள் இன்னமும்
உறைக்கின்றனவே...