இருக்கின்ற இடத்திலேயே
இறுக்கத்தை நீயுணர்ந்து
தனிமைதான் நாடிநின்றாய்,
நாடிகூட துடிக்கவில்லை
தேடி அலைந்தாய் தனிமையை
துளிகூட எட்டவில்லை
தேம்பியழுது தொய்ந்துபோனாயே...
இருளுக்குள் நீயிருந்து
வெளிச்சத்தை பழிக்கின்றாய்
நிழல்தந்த குகைகூட
கும்மிருட்டாய் ஆனபின்பும்
நிழல்தேடி அலைகின்றாய்...
தொலைதூரம் சென்ற வாழ்வை
வால்தொட்டு இழுக்கின்றாயே...
நிலவோர நட்சத்திரமாய்
சிலநாட்கள் தங்கிவாழ
பலகாலம் காந்திருந்தேன்...
அமாவாசை இருட்டதனில்
நட்சத்திரம் ஜொலிக்கிறது
நிலவினைத்தான் காணவில்லை...
சிலநேரம் சிந்தித்தால்
நம்பிக்கை தெம்பிழக்கும்...
எதிர்கால வாழ்வெண்ணி
புதிர்வாழ்வு வாழ்கின்றாய்
உதிராத உன்னன்பு
உதிரம் உறையுமட்டும்
என்னோடு ஒட்டிவாழும்...
6 comments:
தங்களின் கவிதை நன்றாக உள்ளது,
அமாவாசை இருட்டதனில்
நட்சத்திரம் ஜொலிக்கிறது
நிலவினைத்தான் காணவில்லை...
ஆற்றாமையை காட்டும் வரிகள். நன்று!
தனிமை பலரை மிருகமாக்கும்;சிலரைக் கவிஞனாக்கும்.. வரிகள் அருமை.
very nice "irulukkul nee irunthu velichathai pazhikinraai"
very nice "irulukkul nee irunthu velichathai pazhikinraai"
அழகான கவிதை.. அட்டகாசமான வார்த்தைக் கோர்ப்பு..!!!
Post a Comment