Friday, February 06, 2009

வெறும் வானம்...

வெட்டவெளி வானத்தில
ஒற்றைநிலா மட்டும் காணம்...
தொட்டுப்பார்க்க ஆசைவந்து
வானை எட்டிப் பார்க்கையில
வானம் மட்டும் வெட்டையாக
தனிமையில தவிச்சிருக்கு...
ஒட்டியிருந்த நட்சத்திரமும்
ஒளியிழந்து தனிச்சிருக்கு...

என்வீட்டு முற்றத்தில
கூடுகட்டி வாழ்ந்திருந்த
மணிப்புறாவும் பிரிஞ்சிருக்கு...
கோழிகூட கொஞ்சநாளா
கொக்கரிக்க மறந்திருக்கு...

கண்ணைமுட்டும் தூக்கம்கூட
தூக்குப்போட்டு செத்திடுச்சு...
நெஞ்சுக்குள்ள நீண்டநாளா
தீயொன்னு எரிஞ்சிட்டிருக்கு...

வாழ்க்கையோடு ஒட்டிவந்த
பற்றுக்கூட பறந்துதான் போயிடிச்சு...
தொற்றுநோயாய் தொற்றிவந்த
காதல்கூட கசப்பாச்சு...

நிலத்துக்குள்ள ஓடுகின்ற
வேருகூட காய்ஞ்சுபோச்சு...
தண்ணியூற்றி வளர்க்கின்ற
மரமும்கூட சரிஞ்சுபோச்சு...
நெஞ்சுக்குள்ள தீயை அணைக்க
கண்ணீரத்தான் கொட்டுகின்றேன்
வழிந்தோடி போகுதடி
வலிமட்டும் போகுதில்லை...

நொந்துபோன நெஞ்சுக்கெல்லாம்
சொந்தம் எதற்கு...
அந்தரத்தில் தொங்கும் வாழ்வை
எந்திரிச்சு நிக்க வைக்க
நீ வேணும் என் செல்லமே...!

5 comments:

Anonymous said...

அன்பின் நண்பர்..மதுரன்

வேதனையின் வலிகள்
வார்த்தைகளாய்
விழுந்துள்ளது
உங்கள் வரிகளில்..

பாவம் இந்த பஞ்சு மனசு
பதறுது....பதிலை நாடி

அழகான சோகக் கவிதை

வாழ்த்துக்கள் நண்பரே

அன்புடன் இளங்கோவன்
அமீரகம்.

Anonymous said...

"நெஞ்சுக்குள்ள நீண்டநாளா
தீயொன்னு எரிஞ்சிட்டிருக்கு..."

iyoooo...........pls wait i'll send the fire brigade.

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள். வித்தியாசமான சிந்தனை. சிறந்த படைப்புக்களில் உங்களது படைப்பும் ஒன்று. உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்........ இலங்கையிலிருந்து

Kavya said...

kadal mozhi surantha unthan nenjil, thideerena kaanal mozhigal eno? anubavama? attu meeriya sinthanaya?

ethuvaaga irunthalum... taanggavillai nenjam...

Kavya said...

kadal mozhi surantha unthan nenjil, thideerena kaanal mozhigal eno? anubavama? attu meeriya sinthanaya?

ethuvaaga irunthalum... taanggavillai nenjam...