Friday, February 06, 2009

கனிகின்ற காலம்...

கடலுக்குள் தீவொன்று
தனியாக அமைத்துன்னை
மார்போடு அணைத்துவைத்து
வாழ்க்கையின் வாசனையை
உயிரோடு கலக்கவைக்க
காலத்தை எண்ணியெண்ணி
எண்ணத்தை உருக்குகிறேன்...

திண்ணையிலே படுத்தாலும்
தொல்லைதரும் சொந்தங்கள்,
எல்லைதாண்டி சென்றாலும்
மல்லுக்கட்ட துள்ளிவரும்...
கடலுக்குள்ள வீடுகட்டி
தனிமையில வசித்திடலாம்
நீ மட்டும் என்னருகில்
கடிகாரமாய் ஒட்டிவந்தால்...

காலங்கள் நமக்கெதற்கு
முக்காலமும் நமதாகும்...
விக்கல்வந்து செத்தாலும்
விம்மியழுது புலம்பினாலும்
உன்னருகில் நானிருந்து
உண்மையன்பை காட்டவேண்டும்...

உன்மடியில் நான் சாய்ந்து
வற்றுமட்டும் கண்ணீரை
தாரையாக வடிக்கவேண்டும்...
வற்றிவிட்ட கண்ணீரும்
ஊற்றெடுக்கா வரமும் வேண்டும்...

உன்முகத்தில் சிரிப்பைத்தவிர
வேறெதுவும் தோணவேண்டாம்...
அழுகின்ற வாழ்க்கையெல்லாம்
அந்தரத்தில் அறுந்துபோகட்டும்...
நிரந்தரமாய் நாமும் வாழ
கனிகின்ற காலமதை
துணிவோடு எதிர்கொள்வோம்...

5 comments:

Anonymous said...

"கடலுக்குள்ள வீடுகட்டி
தனிமையில வசித்திடலாம்"

Tsunami wanthathan problem...

"நீ மட்டும் என்னருகில்
கடிகாரமாய் ஒட்டிவந்தால்..."

kavanam mullu kuthidum. parthuuuu

அன்புடன் அருணா said...

நல்ல கனவுதான்....
அன்புடன் அருணா

கார்த்திகைப் பாண்டியன் said...

காதல் நிரம்பி வழிகிறது வார்த்தைகளில்.. நன்றாக உள்ளது..

Kavya said...

Hi,
Kaadalukku neenggal adimaya?
Allathu kaadal unggalukku adimaya?

Nirjaaaaaaaaaaaay K Music said...

made our day worthfull by visiting ur blog..by Suja,Nirjaa,& Suthar