ஏக்கங்கள் உங்களுக்கு
தேக்கங்களாய் இருக்கலாம்,
எங்களுக்கோ அத்தனையும்
போதனைகள்தானாம்...!
அடிக்கின்ற அம்மாவை
அருவருப்பாய் பார்ப்பதுண்டு...
பொங்கியெழும் அப்பாவை
எதிரியாக முறைப்பதுண்டு...
அடிக்கடி சண்டையிடும்
அண்ணாவை எண்ணும்போது
ஆத்திரமாய் இருக்குமப்பா...
அக்காவைக் கண்டாலே
துண்டாகப் பிடிக்காது...
சொந்தங்கள் கொஞ்சினாலே
உளமெல்லாம் கொதிப்பேறும்...
குழந்தையாக இருப்பதாலே
தொந்தரவு தாறார்கள்...
பெரியவளாய் வந்துவிட்டால்
பிரச்சினைகள் பறந்துவிடும்...
அக்காமட்டும் இல்லையென்பாள்
எனக்கு அது விளங்கவில்லை...
சிறிதாவே இருந்துவிட்டால்
சிரிச்சிட்டே வாழ்ந்திடலாம்
என்றுதான் நினைச்சிருந்தா
தொல்லைகள் கூடுதடா...
குழந்தையை தெய்வமென்பர்
சாமிகளை கட்டிப்பிடிச்சா
கொஞ்சி கும்பிடுவிங்கள்...?
எங்களுக்கும் மனசிருக்கு
படிப்பினைகள் எண்டுசொல்லி
தண்டிப்பது நியாயமா...?
2 comments:
அருமையான ஆழ்ந்த சிந்தனை...
பாராட்டுக்கள்...
பார்க்காமல் கடந்து போகும்
வாழ்வின் பக்கங்களை (சு)வாசிக்க திறந்து வைத்ததற்கு..
.அருமையான ஆழ்ந்த சிந்தனை...
பாராட்டுக்கள்...
பார்க்காமல் கடந்து போகும்
வாழ்வின் பக்கங்களை (சு)வாசிக்க திறந்து வைத்ததற்கு.
Post a Comment