தாடி, மீசை வளர்த்தால் பலருக்கு பல பிரச்சினைகள் என்று சொல்வார்கள். காதலில் தோற்றதால் தாடி வளர்க்கிறான் என்பார்கள் சிலர். ஆனால் உலகளாவிய ரீதியில் தாடி, மீசை வளர்ப்போர் கழகத்தினால் (இதுக்கெல்லாமா...?) போட்டிகள் நடத்தப்படுகின்றன. தாடி, மீசை வளர்ப்போர் கழகத்தினரால் 1990ஆம் ஆண்டு சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்போட்டி, 1995ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய போட்டியாக நடைபெற்று வருகின்றமை சிறப்பானதாகும். 2007ஆம் ஆண்டு லண்டனில் இந்தப்போட்டி நடைபெற்றது. இந்தவருடம் மே மாதம் 23ஆம் திகதி அலஸ்காவில் இந்த தாடி, மீசை போட்டி நடைபெறவிருக்கிறதாம். விரும்பினால் நீங்களும் முயன்று பாருங்கள். ஏற்கனவே போட்டிகளில் பங்குபற்றிய சிலரது படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment