பொத்திவைத்த இதயத்தினை
காற்றோடு பறக்கவிட்டு
கைகொட்டி சிரிக்கின்றேன்
நேற்றோடு முறிந்த சொந்தம்
மீண்டுவந்த சந்தோஷத்தில்...
தேற்றங்கள் பலபடித்து
கணக்குப்போட்டு பழகியதால்
வாழ்க்கைக் கணக்கை சரியாக
கணிப்பிடத்தான் மறந்திட்டேன்...
ஊற்றெடுக்கும் அன்பதனை
பார்போற்ற சொல்லியதால்
மார்பெல்லாம் குளிருதடி...
யார்யாரோ வந்துபோன வாழ்வதனை
வேரறுத்து வீசிவிட்டேன்...
உண்மை அன்பை
உள்ளங்கையின் உணர்ந்திடவே
பெண்மை உன்னை
தொலைத்ததனை நினைக்கின்றேன்...
நீர்க்குமிழி வாழ்விதனில்
குழிபறித்த பாவி நானல்லவோ...?
வாழ்வென்றால் வசந்தமென்பர்
உணரத்தான் முடிவதில்லை...
துடிக்கின்ற உணர்வுகளை
அடக்கித்தான் நானிருக்கேன்,
தூற்றிய உள்ளங்கள்
எமைப்போற்றும் காலமதை
கலியுகத்தில் தேடுகிறேன்...
ஆற்றல்கள் பல கண்டாய்
தேற்றுதல் வார்த்தை வடிப்பாய்,
துடிக்கின்ற இதயத்தை
வெடிக்காமல் பார்த்திடுவாய்...
படிக்கின்ற காலத்தில்
பருவத்தை உருக்கியதால்
வெறுக்கின்ற வாழ்வதனை
தொலைத்துவிட்டேன் சீக்கிரமே...
நிம்மதியை மீட்டுத்தர
முழுமதியாய் நீயுதித்தாய்...
அவள் நினைவோடு நிஜமாக
காலமெல்லாம் சேர்ந்துவர
வரம்தாராய் கலியுகமே...
2 comments:
ஆழமும் அகலமும் அளவிடமுடியாத கடலைப்போன்றது வாழ்க்கை. வாழ்க்கைக் கடலைக் கடக்கும் போது எந்த உருவத்தில் இடர்கள் எதிர்ப்படும் என்று கணிக்கமுடியாது. எதிர்ப்படும் இடர்கள் விளைக்கும் துன்பமே கவலையாகும். கவலையை நம்மில் குடியேற விட்டுவிட்டால் உடலை உருக்கி உள்ளத்தை அரித்துவிடும்.
உங்களது கவிதையை வாசிக்கும் போது எனது கடந்த காலம் என்னோடு பேசுகிறது. சில நேரங்களில் நாம் எடுகின்ற முடிவுகள் பின்பு தரும் வேதனை சொல்ல முடியாது திருத்தவும் முடியாது. முடிந்தது முடிந்ததுதான். வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்ந்து பார்க்கவேண்டும் முடிந்த வரையில்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
பார்க்கும் போது மனசு வலிக்குது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Post a Comment