மனதினைக் கவரும் பல விடயங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை அனைத்தும் மனதுக்கு அமைதியைத் தருவனவாக அமைவதில்லை. இருப்பினும் ஒருசில விடயங்கள் இதற்கு விதிவிலக்கானவை. அந்தவகையில் கனடாவில் உருவாகியிருக்கும் 'நிம்மதிதரும் கூடு' பற்றிய படங்களையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள். நகர வாழ்வில் உழைத்து சோர்ந்துபோனவர்கள் ஓய்வெடுப்பதற்கு பல வழிகளைத் தேடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்திலேயே இந்த கூடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. யாருமற்ற காட்டுப் பிரதேசங்களில் அமைதியாக ஓய்வெடுப்பதற்கென்றே இந்த கோளவடிவ கூடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
2.8 தொடக்கம் 3.2 மீற்றர் விட்டங்களைக் கொண்ட கூடுகள் உருவாக்கப்படுகின்றன. இதனுடைய சராசரி எடை 500 கிலோகிராம்களாகும். மரம் மற்றும் பைபர்கிளாஸ்களினால் உருவாக்கப்படும் இந்தக் கூடுகளுக்கு அமைதிதரும் சக்தி இருக்கிறதாம். இதனுள் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இருவர் முதல் சிறிய குடும்பம்வரை தங்கக்கூடிய அளவுகளில் இந்தக் கூடுகள் இருக்கின்றன. மூன்று மரங்களை இணைத்து இந்தக் கூடுகள் தொங்கவிடப்படுகின்றன. இதில் ஒருநாள் தங்குவதற்கு 125 டொலர்கள்வரை அறவிடப்படுகின்றன. இதனை சொந்தமாக உருவாக்கவேண்டுமானால் 45,000 டொலர்கள்வரை செலவாகுமாம். எங்களால் இங்கு சென்று தங்குவதற்கு முடியாவிட்டாலும் பார்த்து மகிழமுடியுமல்லவா? இயற்கையில் அழகினை மரங்களில் உச்சியிலிருந்து ரசிக்கிறார்கள்.
No comments:
Post a Comment