
Thursday, January 08, 2009
The Salt Hotel
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அதனால்தான் என்னமோ இந்த ஹோட்டல் முற்றுமுழுதாக உப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொலிவியா (Bolivia) என்ற இடத்திலே இருப்பதுதான் இந்த ஹோட்டல். உலகத்தில் மிகப் பெரிய உப்புப் படையினைக் கொண்ட இடம் இது. சுமார் 10,582 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் உப்புப் படை காணப்படுகிறதாம். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய உப்புப்படை என்கிறார்கள். இந்த இடத்தில்தான் 1993ஆம் ஆண்டு இந்த உப்பு ஹோட்டலினை நிறுவியிருக்கிறார்கள். 15 தங்கும் அறைகள், ஹோல், சாப்பாட்டறை, பார் , நீச்சல்தடாகம் என அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றதாம். கூரை முதல் படுக்கைவரை உப்பினாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மழைகாலங்களில் புதிய உப்புக்கட்டிகளை மாற்றி அமைப்பார்களாம். ஆனாலும் இது மிகவும் வலிமையான கட்டடம் என்று குறிப்பிடுகிறார்கள். உலகத்தில விதம்விதமா அனுபவிக்கிறதுக்கு என்னென்னமோ இருக்கு இல்லிங்களா? நம்மளால பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும்.


Labels:
விநோதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment