பாசிபடிந்த படிகளிலே
ஏறித்திரிந்த காலங்களை
ஏங்கியின்று தவிர்த்திருக்கேன்...
எட்டாத உயரத்தை
தொட்டிடத்தான் பாசிப்படி
உதவிடுவதாய் மாயைகொண்டு
மண்மீதில் சறுக்கிவிட்டேன்...
திகட்டாத அன்பதுவை
உன்மீது வைத்ததனால்
பகட்டில்லா வாழ்விதனை
நுகர்கின்றேன் வசந்தமாய்...
அன்போடு நீ அழைக்கும்
என் நாமத்தின் குரலினை
செவிவழி வாங்கிடமுன்
இதயத்துள் நுழையுதடி...
அன்போடு ஒரு வார்த்தை
நீ அழைக்கும்போது
நூறாண்டு உன்னோடு
வாழ்ந்திடவே மனம்துடிக்கும்...
துணையாக நீ வந்தால்
துயரேது என் வாழ்வில்...?
கரையில்லா வாழ்விதனை
கறையின்றி வாழ்ந்திடவே
கரம்சேர்ப்போம் ஓடிவா...
இதயத்தின் ஓரத்தில்
இருக்கின்ற இறுமாப்பை
உருக்கியே உடைத்துவிட்டு
உதிரத்தில் கலந்துவிட
உண்மை அன்பை நீ தா...!
இனிப்பான வாழ்வை
தனிமையில் வாழ்ந்திடவா
தவிப்பினில் இருக்கிறேன்...?
உன்னோடு வாழ்ந்திடவே
உண்மையாய் நேசிக்கிறேன்
உரிமையோடு அழைப்பேன்
என்னவளாய் நீ வா..!
2 comments:
பாசிப்படிகளில் ஜாக்கிரதையாகத்தான் ஏறவேண்டும் நண்பரே...!ஏணிப்படிகள் மீதும் கொஞ்சம் கண்ணுறுங்கள்..!
http://bodhivanam.blogspot.com/
நன்றி ஐயா உங்களுடைய கருத்துக்கு. ஏணிப்படிகளில் ஏறி நிலவினைத் தொடத் துடிக்கின்றேன் (ஏற்கனவே என்னுடைய பதிவில் இருக்கிற ஏணி...) ஆனால் இன்னமும் கைகூடவில்லை. உங்கள் பதிவுகள் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கின்றது. உங்களுடைய விமர்சனம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. உங்கள் முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்...
Post a Comment