Tuesday, December 16, 2008

வசந்தத்தின் வாசனை...

பசுமை நிழலில்
இருகரம் பற்றி
நடைபயிலும்
என் செல்லமே..!
சொல்லாத துன்பமெல்லாம்
பல்லக்கில் பறந்திடுமே
உந்தன் சிரிப்பதனில்..!

நிழலுலகில் வாழும்
நிஜத்தின் நிழல் நீ..!
நம் புஜமேறி
புன்னகைக்கும் மொழியே
தங்கத் தமிழே..!
துன்பங்கள் பறந்தோட
துள்ளியோடும் மானே
இன்பத் தேனே..!

வசந்தத்தின் வாசனையை
வரமுன்னே நுகரவைத்தாய்...
துயரத்தின் துன்பமதை
தூக்கிட்டு கொன்றொழித்தாய்...
வாய்விட்டுச் சிரித்திடவே
எங்கள் சேயாகப் பிறந்தாயே...
உன் பாதம்பட்ட பூமி
பசுமையில் திளைத்திடுமே
நம் உள்ளம்போல்...!

செல்லக் கண்ணா..!
வாழ்வின் வசந்தத்தில்
நிழலாக தொடர்ந்து வா...
இரு கரமென்ன,
இருக்கும்வரை
இறுக்கி அணைப்போம்
இன்பம் தாராயோ...?

No comments: