அண்மையில் என் வாழ்க்கையில் நடந்த ஜீரணிக்கமுடியாத சம்பங்களில் ஒன்றுதான் இது. இதனை சுவாரஸ்யமான சம்பவம் என்று சொல்வதா? அல்லது படிப்பினையான சம்பவம் என்று சொல்வதா? என்று எனக்குத் தெரியலைங்க. நீங்களே முடிவு பண்ணிடுங்க...
என்னுடைய பணிநிமிர்த்தமாக கடந்தவாரம் ஒரு பயிற்ச்சிப் பட்டறைக்குப் போயிருந்தேன். அது ஓர் அழகான சூழலில் அமைந்த விடுதியொன்று... (ஏற்கனவே நான் பலதடவை நண்பர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன்... மனதுக்கு அமைதி தரக்கூடிய அழகான இடம்...). அந்தப் பயிற்ச்சிப் பட்டறையில் மொத்தமாக 22பேர் கலந்துகொண்டோம். முதல்நாள் பயிற்சிப்பட்டறை நிறைவடைந்ததும் நண்பர்கள் எல்லோரும் வெளியில் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம்... (நான் என்னவளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன்...) அப்போதுதான் அந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.
எங்களுடன் கதைத்துக் கொண்டிருந்த நண்பன் ஒருவனின் முகத்தில் கலவரம் தென்பட்டது. என்னாச்சின்னு கேட்டபோதான் இப்படியும் பெண்கள் இருக்காங்களேன்னு கோபம் கோபமா வந்திச்சு. எங்க முன்னாடி ஒரு ஜோடி வந்து உட்கார்ந்தாங்க. ஒருநாள் இரவை களிப்பதற்காக வந்தவர்கள் அவர்கள் என பின்னர்தான் அறிந்துகொண்டோம். ஏனெனில் அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையனுடன் ரொம்ப சின்சியரா லவ் பண்ணிடிருக்காங்களாம்... (இதுக்குப் பேரு லவ்வா?). தலைநகரில் தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் இருக்கின்ற வங்கியில் வேலைசெய்கின்ற ஒரு தமிழ் பெண் அவள்... (சொல்லவே வெட்கமா இருக்கு...). என்னுடன் இருந்த நண்பனின் பட்ச்மெட். அதுதவிர முதலுதவி பயிற்ச்சிப் பட்டறையிலும் ஒன்றாக கடமையாற்றியிருக்கிறார்கள். அந்த பொண்ணு லவ் பண்ணிட்டிருக்கிற பையனும் இந்த நண்பனின் நண்பன்தான். ஆனால் இந்த விடுதியில் வேறு ஒருத்தனுடன் கண்டவுடன் அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை... (எங்களாலயும் முடியலைங்க...).
அந்த பொண்ணு இவனைக் கண்டவுடன் உடனே பதற்றத்துடன் எழுந்து சென்றுவிட்டாள். சற்றுநேரத்தில் அவளுடன் வந்திருந்த வாலிபன் மட்டும் கீழே இறங்கி வந்து, ரிஷெப்சனில் ஏதோ கேட்டான். அங்கு நாங்கள் யார் என்பதை கூறியிருப்பார்கள். அதனால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதால் அமைதியாக சென்றுவிட்டான் அவன்.
அந்த பொண்ணு பற்றி என்னுடைய நண்பன் பின்னர் விரிவாக சொன்னான். அவளுடைய தாய் ரொம்ப பக்தியானவராம். கோயில், குளம் என்று பக்தியாக திரிகின்றவராம். அப்படிப்பட்ட பெற்றோரின் பெயரைக் கெடுக்கின்ற ........ (இதில் என்ன சொல்லியிருப்பான்னு நீங்களே நினைச்சுக்கோங்க...) இவளை உயிரோட கொளுத்தனும் என்டு சொன்னான். அவனுடைய கோவத்திலும் அர்த்தம் இருக்குதானே. லவ் எங்கிறது எவ்வளவு புனிதமானதுங்கிறத உணராத ஜென்மங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும். இவர்களை காதலர்கள் என்று சொல்றதே பாவம்தான். இவ்வளவு கேவலம்கெட்டதனமாக பெண்கள் (ஒருசில பெண்கள் மட்டும்) நடக்கிறார்களே என்று நினைக்கும்போது நெஞ்சு கனக்குது...
தயவுசெய்து இப்படி சபல புத்திகொண்ட பெண்கள் காதலிக்காதிங்க. கேவலம்கெட்டதனமாக நடந்து காதலைக் கொச்சைப்படுத்தாதிங்க பிளீஸ்...
1 comment:
வணக்கம் மதுரன்..
நீங்கள் எழுதிய "இப்படியும் சில பெண்கள்" என்ற ஆக்கத்தில் உங்களின் கோபம் பேனா முனையால் கசிந்திருப்பதை காண முடிந்தது. என்னமோ தெரியேல இந்த சம்பவத்தில் எனக்கு சுவாரஸ்யம் தான் அதிகம்.
ஏனெனில் உங்கள் ஆக்கத்தில் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் நண்பனின் (செல்லமாக partner) பக்கத்தில் இருந்தவன் நான் தான். என்ன செய்ய இந்த கலாசார சீரழிவுக்காக என்னால் கவலைப்படத்தான் முடிந்தது. என்ன கொடுமை சார்...
Post a Comment