Monday, December 22, 2008

காதல் பிசாசு...

உன் நினைவுகள் என்னை
நிழலாய் தொடர்கையில்
நெடுந்தூரம் பயணித்துவிட்டேன்...
பிரிவினைத் தாங்காது
அழுகிறது வானமிங்கு...

என் உள்ளம் கிழிந்த
வலியதை தாங்காது
வானமும் அழுகிறது...
வெறுக்கின்ற வாழ்வதனில்
சுறுக்கென்று குத்தியதே
வார்த்தையெனும் அம்பு...!

காதினுள் நுழைந்து
உள்ளத்தை கிழித்து
உதிரத்தை உறிஞ்சி
உயிரினை வாங்கும்
உக்கிர மோகினி...!
சதையினை கசக்கி
சாறாய் பிழிந்து
சாக்கடையில் வீசும்
காதல் பிசாசு...!

வலியினை மறைத்து
வார்த்தைகள் வருகையில்
தொண்டையில் சிக்கும்
பிண்டமாய் ஏதோ
உருண்டையும் உருள்கிறதே!
இருளினில் எழுதும் கவிதையாய்
காதலை வளர்த்துவிட்டோம்...!
காண்டமும் பலிக்குமென
கனவுகள் காண்பதனால்
முண்டமாய் நானிங்கு
தலையினைத் தேடுகிறேன்...!

கனவுலகில் வாழ்கையில்
எல்லையை சொல்லிவைக்கும்
எத்தனை சொந்தங்கள்...
எல்லையில்லா அன்பிற்கு
எல்லை காண்பிக்கும்
குத்தல் வார்த்தைகளை
அப்பப்ப தப்பாமல்
சொல்லிவைக்கும் சொந்தங்கள்..!

நிஜமாக வாழத்தானே துடிக்கிறேன்
நிழல்கூட என்னை தொடருதில்லை!
நித்திரையில் நிஜங்களும்
செத்திடத்தான் துடிக்கிறது
காலம்தான் பதில் சொல்லும்
காதலின் சிகரமெங்கே...?

No comments: