உலகத்தின் புகழ்பெற்ற எலக்ரோனிக் கண்டுபிடிப்பாளர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் நிகோலா டெஸ்லா என்ற விஞ்ஞானி. 1856ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த இவர் பல்வேறுபட்ட மோட்டர் வகைகளைக் கண்டுபிடித்துள்ளார். அத்தோடு தீப்பொறியோடு சம்பந்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர். தந்தியில்லாமல் தீப்பொறியின் உதவியில் தொழிற்படுகின்ற மின்குமிழ், சிறிய மோட்டர் போன்றவற்றினைக் கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் பிற்காலத்தில் அந்த கண்டுபிடிப்புகளின் தேவைகண்டு உலகம் வியந்தது.
இவர் 1942ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இருப்பினும் நிகோலா டெஸ்லா விட்டுச் சென்ற கண்டுபிடிப்புகள் இப்பொழுதும் பலருக்கு உதவுகின்றன. அந்தவகையில் இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியாவின் பீற்றர் என்பவர் இப்பொழுது பல கண்டுபிடிப்புகளை செய்துவருகின்றார். தனக்கென ஓர் இணையத்தளத்தினை வைத்திருக்கும் இவர் தனது கண்டுபிடிப்புகளை இணையம் வாயிலாக உலகுக்கு வெளிப்படுத்திவருகின்றார்.
அந்தவகையில் அண்மையில் இவர் கண்டுபிடித்திருக்கும் சாதனம்தான் எங்களுடைய வாகனங்களின் பாதுகாப்பிற்கு உதவுகின்ற கருவி. தீப்பொறி (அதாங்க... ஸ்பாக்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்பு அமைந்திருக்கிறது. 6 அடி நீளமான கம்பியொன்றியை மோட்டரில் பொருத்தி எங்களுடைய வாகனத்தின் கூரையிலே பொருத்திவிட வேண்டும். தேவை ஏற்படும்போது அதனை இயங்கச் செய்தால் உங்கள் வாகனத்தினைச் சுற்றி மின்சார தடுப்புச்சுவர் உருவாகும். ஒருமுறை உங்கள் வாகனத்தினை சுற்றுவதற்கு 10 செக்கன்கள் தேவைப்படும் அந்த வளையத்துக்கு. ஆகையினால் எளிதில் இந்த வளையத்தினைத் தாண்டி திருடர்கள் உள்ளே நுழைய முடியாது.
பீற்றர் அவர்கள் தனது கண்டுபிடிப்பினை செய்து காட்டுவதையே படங்களில் காண்கிறீர்கள். இதேபோல் பல கண்டுபிடிப்புகளை பீற்றர் உருவாக்கியிருக்கின்றார். தீப்பொறியின் உதவியில் கிறிஸ்மஸ் மரம், அலங்கார விளக்குகள் என பலவற்றினைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment