வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப, மனிதன் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் உலக வெப்பமயமாதல் என்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. அதனை எப்படித் தடுக்கலாம் என தலையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள் விஞ்ஞானிகள். உலக வெப்பமயமாதலின் விளைவாக 20ஆம் நூற்றாண்டில் கடல்மட்டம் 10 செ.மீற்றர்கள் உயர்வடைந்திருக்கிறதாம். 21ஆம் நூற்றாண்டில் 20 தொடக்கம் 90 செ.மீற்றர்கள்வரை கடல்மட்டம் உயர்வடையுமென எதிர்வுகூறப்படுகின்றது.இப்படி உலகவெப்பமயமாதலால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு எப்படி புகலிடம் கொடுக்கலாமென கட்டடக் கலைஞர் Vincent Callebant ஆழகான மிதக்கும் நகரமொன்றை வடிவமைத்திருக்கின்றார். அல்லிப்பூ வடிவிலான அந்த மிதக்கும் நகரத்தின் வரை படங்களையே படங்களில் காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment