Wednesday, December 17, 2008

பாவனையற்ற வெளிச்சவீடு...

எத்தனையோ விடயங்க நம்ம வாழ்க்கையில் பிரயோசனமே இல்லாம இருக்குமில்லையா. அப்பிடி ஒரு சமாசாரம்தான் இது. கப்பல்களுக்கு வழிகாட்டியாக சில இடங்களில வெளிச்ச வீடுங்க அமைஞ்சிருக்கிறத நீங்க பார்த்திருப்பிங்க. நம்ம நாட்டில பருத்தித்துறை, காலி, கொழும்பு என்று பல இடங்களில இந்த வெளிச்ச வீடுங்க இருக்கிறத நீங்க அவதானிச்சிருப்பிங்க (பருத்தித்துறை வெளிச்சவீட்டில அடிக்கடி நாம ஏறி விளையாடியது இப்பவும் ஞாபகம் இருக்கு...). இப்படி உலகத்தின் பல பாகங்களிலும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக இந்த வெளிச்சவீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிலது பாவனைக்கு உதவாமல் கைவிடப்பட்டும் இருக்கின்றன. அப்படி கைவிடப்பட்ட ஒரு வெளிச்சவீடுதான் இது.

டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கின்ற Rubjerg Knude Lighthouse என்றும் வெளிச்சவீடுதான் இப்பொழுது கைவிடப்பட்டிருக்கின்றது. 1899ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 11 வருடங்களின் பின்னர் அதாவது 1900ஆம் ஆண்டு டிசெம்பர் 27ஆம் திகதி இந்த வெளிச்சவீடு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கடல்மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரம் கொண்டது இந்த வெளிச்சவீடு. சுமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த வெளிச்சவீட்டினைச் சுற்றி மணல் குவிந்ததால் 1968ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதியுடன் இதன் இயக்கம் நிறுத்தப்பட்டது.

2002ஆம் ஆண்டுமுதல் முற்றாக கைவிடப்பட்ட இந்த வெளிச்சவீடு இப்பொழுது அருங்காட்சியகமாக மாற்றியமைக்கட்டிருக்கிறது. இதில் உணவு விடுதியும் இயங்குகிறதாம். மணலினால் சூழப்பட்ட வெளிச்சவீட்டின் தோற்றத்தினையே படங்களில் காண்கிறீர்கள்.



No comments: